உத்தரப்பிரதேச மாநிலம், பைசாபாத் நகரில் மிகவும் பிரபலமானது கர்தாலியா பாபா ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சில மாதத்திற்கு முன்பு இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பசுக்களை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
இதனிடையே, அவரது வன்மமான சேட்டைகள் கர்தாலியா பாபா ஆசிரமத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆசிரமத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அவரைப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி அந்த நபரை வழக்கம்போல் பசுக்கள் இருக்கும் இடத்திற்குள் நுழைவதை சிசிடிவியில் கண்காணித்த பணியாளர்கள், அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வாயில்லா ஜீவன் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த நபரின் பெயர் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.