உத்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள நாக்லா பஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஒரு கோடி தர வேண்டும் என்று மிரட்டுவதாகவும், எட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடன் புகரளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார், தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார். இந்நிலையில் இளம்பெண்ணின் கைப்பேசி சிக்னலை வைத்து, இளம்பெண் அவரது வீட்டிற்கு அருகே சில மீட்டர் துரத்திலிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இளம்பெண்ணின் கைப்பேசி சிக்னல் காட்டிய இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு பேரதிர்ச்சியாக, அப்பெண் தனது காதலனுடன் இணைந்து தன்னை கடத்தி விட்டதாக நடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய அவரது காதலனை தேடி வருகின்றனர்.