உத்தரப் பிரதேச மாநிலத்தில் பி.சி.எஸ். அலுவலராக அசோக் சுக்லா பணியாற்றிவருகிறார். இவர், சமூகவலைதளத்தில் அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹர்ததோய் மாவட்ட ஆட்சியாளர், ஹத்ராஸ் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அசோக் சுக்லா வகித்துள்ளார். இதேபோல், பிரசாந்த் கனோஜியா என்ற பத்திரிகையாளர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக கருத்து பகிர்ந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பின்னர், கடும் எதிர்ப்புக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை மாநில அரசு தனது நடவடிக்கைகளின் மூலம் அடக்க நினைக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பொது சிவில் சட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி