ETV Bharat / bharat

சாதியால் நேர்ந்த கொடூரம்: காதலர்கள் குடிசைக்குள் பூட்டி எரிப்பு! - சாதியால் நேர்ந்த கொடூரம்

லக்னோ: பண்டா மாவட்டத்தில் காதலர்களைக் குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. காதலன் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 80 விழுக்காடு தீக்காயங்களுடன் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

UP Honour Killing
UP Honour Killing
author img

By

Published : Aug 6, 2020, 4:13 PM IST

தொழில்நுட்ப யுகத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் தடையாகத்தான் இருக்கிறது. காதலர்கள் சாதி கடந்து காதலித்தாலும், அவர்களை நிம்மதியாக வாழ இந்த பிற்போக்கு சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதில்லை.

பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் இணைந்தாலும், அவர்களின் பெற்றோர் சாதி மாறி திருமணம் செய்தால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவதில்லை. இதனால் தூக்கு மேடைக்கு ஏறக்கூட தயார் என்கின்றனர். 2018ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகள், ஒரு நாளில் காதலித்ததற்காக 4 பேர் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

அந்த நான்கு பேரில் ஒருவர்தான் இன்று உத்தரப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கர்ச்சா கிராமத்தில் வசித்துவந்த போலா (23) என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த பிரியங்கா (19) என்பவரும் காதலித்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரியவரவே, போலாவையும் பிரியங்காவையும் கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்துவந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியங்காவின் பெற்றோர், உறவினர்கள், அவரையும் போலாவையும் ஒரு குடிசைக்குள் பூட்டி, தீ வைத்துள்ளனர். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போலா பாதி வழியிலேயே உயிரிழந்தார். பிரியங்கா 80 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உறுதிசெய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு, மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: திருமணம் முடிந்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் - பெற்றோர் ஆணவக்கொலை செய்யத் தேடுவதாகப் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.