ETV Bharat / bharat

மனைவியுடன் தகராறு: மூன்று பிள்ளைகளை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை

மனைவியுடன் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுபோதையில் மகள்களை ஆற்றில் வீசி தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றுப் பாலம்
ஆற்றுப் பாலம்
author img

By

Published : Jun 1, 2020, 4:41 PM IST

கரோனா ஊரடங்கின் மத்தியில், மன நலன் சார்ந்த பிரச்னைகள், குடும்ப வன்முறைகள், அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில், நண்பனின் உதவியுடன், தன் மூன்று மகள்களைத் தந்தையே ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசம், சண்ட் நகரில் தன் மூன்று மகள்களை தந்தையே காக்டா ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் தெரிய வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று, எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் காவல் துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.

தொடர்ந்து 32 வயதான தந்தையிடமும், அவரது நண்பனிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்து மதுபோதையில் இக்கோர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஏழு வயது, நான்கு வயது, இரண்டு வயது நிரம்பிய மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில், ஏழு மாதங்களே எட்டிய அந்நபரின் நான்காவது மகள், இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டின் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பாக். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.