ETV Bharat / bharat

இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் ஆபாசப் படங்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்த தொழில்நுட்ப வல்லுநர் கைது! - ஆன்லைனில் ஆபாச பட விற்பனை

லக்னோ : இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் உள்பட பல படங்களை விளம்பரப்படுத்தி, விற்பனை செய்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

ech
ech
author img

By

Published : Sep 27, 2020, 3:26 AM IST

உத்தரப் பிரதேசம், சோன்பத்ராவில் உள்ள அன்பாரா பகுதியைச் சேர்ந்த நீரஜ் யாதவ், பி.டெக் பட்டம் பெற்றவர். இவர் ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் ஆபாசப் படங்களை விற்பனை செய்யும் தொழிலில் நீரஜ் ஈடுபடத் தொங்கியுள்ளார். வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளப் பக்கங்களில் குழந்தைகள் ஆபாசப் படங்களை விளம்பரப்படுத்தி அவற்றை விற்பனை செய்து வந்த இவர், இதற்காக பல்வேறு கணக்குகளையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், நீரஜின் நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்து, அவரது வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்ட சிபிஐ அலுவலர்கள், அங்கிருந்து பல மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், ஆன்லைனில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக நீரஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

நீரஜ் வீட்டில் சிக்கிய செல்போன்களை ஆராய்ந்து அவருடன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.