உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா பாதிப்பால் இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவே என தலைமை மருத்துவ அலுவலர் (சிஎம்ஓ) சுரேஷ் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”ஜார்வால் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஜாகீர் ஆலம் (65) என்பவருக்கு ஏற்கனவே நீரிழிவு, இதய நோய் இருந்துள்ளது. திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஜூன் 10ஆம் தேதி எரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், ஜூன் 11ஆம் தேதி அன்று உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் வசித்த ஜார்வால் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109ஆக உள்ளது. இதில் 79 பேர் குணமடைந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு நடுவே ஒரு குட்டி ரிலாக்ஸ் - நடனமாடிய மருத்துவர்கள்