உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் தில்ஹார் பகுதியில் 60 வயது மத்திக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலை ஓரம் இறந்து கிடந்துள்ளார். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என எண்ணி அவர் அருகே யாரும் செல்லவில்லை.
சுமார், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவரிடம் மும்பையில் இருந்து வந்ததற்கான டிக்கெட் இருந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவரத்து பெயர் லியாகத் என்பது தெரியவந்தது.
மேலும், மும்பையில் சிகையலங்கார நிபுணராக இருந்ததும், சமீபத்தில் ஷாஜகான்பூரில் உள்ள மருமகளைக் காணச் சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.