ETV Bharat / bharat

குஜராத் வந்திறங்கியது அமெரிக்கப் பாதுகாப்புக் குழு!

author img

By

Published : Feb 17, 2020, 9:21 PM IST

Updated : Feb 17, 2020, 11:33 PM IST

காந்திநகர்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள அமெரிக்க உளவு பிரிவினர் இன்று அகமதாபாத் வந்தனர்.

Trumps India visit
Trumps India visit

அரசு முறை பயணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகைத் தரவுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்ட பின்பு, அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால் இப்பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள உலகில் மிக பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தை, அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்க உள்ளார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ட்ரம்பின் பாதுகாப்புக்குத் தேவையான உபகரணங்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம், இன்று அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது.

குஜராத் வந்திறங்கியது அமெரிக்க பாதுகாப்புக் குழு!

இதைத் தொடர்ந்து, 10 அமெரிக்க உளவுப் பிரிவினர் உட்பட 18 பேர் அடங்கிய குழு, ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ள மொடீரா மைதானத்தின் உள்ளே, வெளியேயும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து, குஜராத் காவல்துறை துணை ஆணையர் விஜய் பட்டேல் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்பை அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்பார். அங்கிருந்து தாஜ் சர்க்கிள், ஆர்டிஓ அலுவலகம், காந்தி ஆசிரமம் வழியாக, அவர்கள் மொடீரா மைதானத்தை அடைவார்கள். இதற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'தேசிய நலனுக்காக செய்தோம், உறுதியாக இருப்போம்'- பிரதமர் மோடி

Last Updated : Feb 17, 2020, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.