அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் எனக் குடும்பத்துடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இந்தப் பயணத்தின் இரண்டாம் நாளில் (செவ்வாய்க்கிழமை அன்று) டெல்லி செல்லும் அதிபருக்கு, டெல்லி ஐடிசி மௌரியா உணவக விடுதியில் உள்ள பிரபலமான புஹாரா உணவகத்திலிருந்து தனித்துவமான உணவுகள் செய்துகொடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்புக்குப் பிடித்த ருசிக்கு ஏற்றவாறு இந்த உணவுகளில் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய வந்திருந்தபோது புஹாரா உணவகத்திலிருந்து உணவு சென்றுள்ளது. கடந்த 41 வருடங்களாக இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவருக்கு மெனுவில் பெரிய மாற்றம் ஏதுமின்றி புகாரா உணவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ட்ரம்ப் விருந்து நிகழ்ச்சியில் எடப்பாடிக்கு அழைப்பு - நேரில் சந்திக்க ஏற்பாடா?