உலகின் முன்னணி பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. பாசுமதி வகை அரிசிகள் முக்கியமாக இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் தேசத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசியை ஈரான் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. தவிர, சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் பாசுமதி அரிசி அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது.
சிக்கல்
அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய பாசுமதி அரிசிகள் ஏற்றுமதி ஆகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. சமீபத்திய தகவலின்படி ட்ரம்ப் நிர்வாகம், ஈரான் நாடு மீது விதித்து வரும் அதிரடி பொருளாதார கட்டுப்பாடுகளால் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி
இதுதவிர, ஈரான், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் பாசுமதியை ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அதீத பூச்சிக்கொல்லி உரங்கள் என்ற விதிமுறைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியை கடினமாக்குகின்றன. இது தொடர்ந்தால் சவுதி அரேபியாவும் இந்த அழுத்தத்தை இந்தியா மீது திணிக்கக் கூடும்.
தீர்வு என்ன?
பாசுமதி அரிசி ஏற்றுமதி பிரச்னையை தீர்க்க கொள்கை முடிவு அவசியம். அதுமட்டுமின்றி சேமிப்பு வசதிகளை (உணவுப் பூங்கா உள்ளிட்ட) மேம்படுத்துதல், பூச்சிக் கொல்லி உரங்களை நியாயமான அளவில் பயன்படுத்துதல், இயற்கை விவசாயத்துக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட விழிப்புணர்வுகளை இந்திய விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: சிறு விவசாயிக்குப் பெரிய உத்தரவாதம்.!