ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை ஐந்து நிரந்தர நாடுகளாகும். மீதம் உள்ள பத்து நாடுகள் நிரந்தரமில்லாதவை. இந்த உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து தேர்தெடுக்கப்படும்.
அதனடிப்படையில் பெல்ஜியம், டொமினிக் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் இந்தாண்டிற்கான பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி, 2021ஆம் ஆண்டுக்கான ஐந்து நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகளை தேர்தெடுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் 192 நாடுகளின் தூதர்கள் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைப் பின்பற்றி தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, 184 வாக்குகள் பெற்று இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா தேர்வு செய்யப்பட்டதற்கு இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் கென்னத் ஜஸ்டர் வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். "இந்தியா வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள், இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றுவதற்கு மிகுவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. நாம் இணைந்து பணியாற்றி நிரந்தரமான பாதுகாப்பு, வளம் பொருந்திய உலகை உண்டாக்காலாம்" என்றார்.
ஐநா பாகாப்பு கவுன்சிலில் இதற்கு முன்பு 1950 - 1951, 1967 - 1968, 1972 -1973, 1977 - 1978, 1984 - 1985, 1991 - 1992 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தேர்தெடுக்கப்பட்டது. சமீபகாலத்தில் 2011 - 2012ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளையும் சேர்த்து இந்தாண்டு எட்டாவது முறை இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கருப்பினத்தவர்களுக்காக ஐநா அரங்கத்தில் ஒலித்த குரல்!