கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 50 நாள்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் வேலையில்லாமல் வருமானமின்றி, உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்கு பணிபுரியச் சென்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி சொந்த ஊர் திரும்பும் போது பலர், பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவமும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவை இருப்பிடமாகக் கொண்டு இயங்கும் யு.எஸ்.கேபிடல் என்ற நிறுவனம், பிரஜ் பூமி குழுமம் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து கரோனா நெருக்கடியால் உணவு இல்லாமல், தவிப்பவர்களுக்கு உணவு அளிக்க நிதி உதவி வழங்கியுள்ளது.
இது குறித்து யு.எஸ். கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கூறுகையில், "கரோனா தொற்று ஊரடங்கு இந்தியாவில் தீவிரமடைந்து வருவதால், கிராமங்களில் ஏழ்மையில் உள்ளவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் இந்திய அரசு பல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
இருப்பினும், இந்த கரோனா பெருந்தொற்று மனிதநேயத்தைத் தூண்டியுள்ளன. பல்லாயிரக்கணக்கான பசியுள்ள கிராமவாசிகள், முறைசாரா தொழிலாளர்கள், குடும்பங்களுக்கு உணவளிப்பதில் பெருமைப்படுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:'சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களின் தேவையை மாநில அரசு புரிந்து நடக்கவேண்டும்'