உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் நகரில் உள்ள சுக்தேவனாந்த் சட்டக் கல்லூரியின் தலைவராக இருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த். இவர் மீது அதே கல்லூரியில் படித்துவரும் 23 வயதான மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல மாணவிகள், சிறுமிகளை சுவாமி சின்மயானந்த் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், இதனை வெளியில் கூறுபவர்களை அவர் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடியையும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீடியோ வெளியிட்ட மாணவி கடந்த மூன்று தினங்களாக மாயமான நிலையில், சுவாமி
சின்மயானந்த் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.