நெசவாளர்களுக்கு மின்சார மானியம் தொடர்பான விதிகளை மாற்றுவதற்கான யோகி ஆதித்யநாத்தின் அரசின் முடிவுக்கு எதிராக வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு பங்கர் மகாசபா எனும் நெசவாளர் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
வாரணாசியைச் சுற்றியுள்ள பெரும்பாலான நெசவாளர்கள் நெசவு ஆலைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், விவசாயிகளுக்கு மின்சார மானியம் தருவதுபோல தங்களுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
பங்கர் மகாசபா தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹஜி ரகமத்துல்லா அன்சாரி, "யோகி ஆதித்யநாத் அரசு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்சார மானிய விதிகளை திருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் புதிய விதியால் நாங்கள் அதிகமான தொகையை மின்சாரக் கட்டணமாகச் செலுத்திவருகிறோம். அமைச்சரவை ஒரு தலைபட்சமாக இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், நெசவாளர்களாகிய நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். எனவே, அடுத்த 15 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடபட முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கலையிழந்த கைத்தறிப் பட்டு நெசவுத் தொழிலை மீட்க கோரிக்கை!