ETV Bharat / bharat

நொய்டாவில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்! - அபராதம்

நொய்டா: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நொய்டாவில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விழுங்கி எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Coronavirus  Spitting  Tobacco  Noida  நொய்டாவில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்  எச்சில் துப்பினால் அபராதம்  அபராதம்

author img

By

Published : May 6, 2020, 1:08 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நொய்டாவில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விழுங்கி எச்சில் துப்பும் நபர்களுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய உத்தரவு திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக நொய்டா நிர்வாக ஆணைய தலைமை அலுவலர் ரிது மகேஸ்வரி கூறுகையில், 'எச்சில் துப்புவதால் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் முறையாக தவறிழைப்பவர்களுக்கு ரூ.500ம், இரண்டாவது முறையாக தவறிழைத்தால் ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்' என்றார்.

இதேபோல் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதும் குற்றமாகும். இவ்வாறு, 'முகக்கவசம் இன்றி வெளியே வந்தாலும் அபராதம் விதிக்கப்படும்' என்று எச்சரித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தின் கௌதம புத்தர் மாவட்டத்தில் மட்டும் 179 கரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். இந்தப் பகுதியை மாநில அரசு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

நாடு முழுக்க கரோனா வைரஸூக்கு 46 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,583 ஆக உள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்' - ஐ.நா சபை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.