ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில், கரோனா வைரஸூக்கு 19 பேர் உயிரிழப்பு! - கரோனா வைரஸ்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750 கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

UP COVID-19 positive cases coronavirus fatalities coronavirus UP corona cases உத்தரப் பிரதேசம் கரோனா வைரஸ் கோவிட்-19

author img

By

Published : Jun 27, 2020, 9:51 AM IST

உத்தரப் பிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 19 கரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் புதிதாக 750 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாநிலத்தின் மூத்த அலுவலர் கூறுகையில், “மாநிலத்தில் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.

இதுவரை ஆறு லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளோம். கடந்த வியாழக்கிழமை (ஜூன்25) மட்டும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பேசுகையில், “இதுவரை மாநிலத்துக்கு 18 லட்சத்து 69 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். அவர்களில் 1,643 பேருக்கு கரோனா அறிகுறிகள் தென்படுகின்றன. 225 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: வரலாற்றிலேயே முதல்முறை: திருமலை தேவஸ்தானத்தின் உயர் அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.