ETV Bharat / bharat

சாலை வசதி இல்லை... மருத்துவமனைக்காக 2 கி.மீ முதியவரை கட்டிலில் தூக்கி சென்ற இளைஞர்கள்! - முதியவரை கட்டிலில் தூக்கி சென்ற இளைஞர்கள்!

லக்னோ: சாலை வசதி இல்லாத காரணத்தினால், இரண்டு இளைஞர்கள் நீர் நிரம்பிய வயல்கள் வழியாக கட்டிலில் முதியவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற காணொலி வைரலாகியுள்ளது.

வயல்
வயல்
author img

By

Published : Jul 22, 2020, 7:42 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள உட்வத் நகர் கிராமத்தில் சரியாக சாலை போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கிராமத்திற்கு விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் கோவிந்த் தார் துபே, சாலை வசதி இல்லாததால் தண்ணீர் நிரம்பிய வயல்கள் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் கிராமத்து இளைஞர்கள் அவரை கட்டிலில் படுக்க வைத்தப்படியே நீர் நிரம்பிய வயல்கள் வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் ஒன்றரை கிமீ தூரம் முதியவரை தூக்கி சென்ற இளைஞர்கள், மீண்டும் சிகிச்சை முடிந்தபிறகு அதே கட்டிலில் வைத்தப்படியே தூக்கி வந்துள்ளனர். இதைத் தனது செல்போனில் படம்பிடித்த கோவிந்த, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் வீட்டிலிருந்து 2 கி.மீ வரை சாலை வசதி இல்லை. குறிப்பாக மழை பெய்யும் காலங்களில் பிரதான சாலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிடும். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியீடுவதின் மூலம், நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய தலைமை மேம்பாட்டு அலுவலர் கோண்டா சஷாங்க் திரிபாதி, இச்சம்பவம் குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும். சம்பந்தப்பட்ட பி.டி.ஓ, கிராம பஞ்சாயத்து அலுவலர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் நிகழாமல் தடுப்போம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.