பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை கழிப்பறைகள் முறையாக கட்டப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து கழிப்பறை கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வளர்ச்சி திட்ட அலுவலர் மதுசூதன் நாகராஜ் பேசுகையில், பல நூறு கோடி தவறான முறையில் கையாடப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள ஊழல் குறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.