ETV Bharat / bharat

முதலமைச்சரின் தந்தை காலமானார்

டெல்லி: யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவந்த நிலையில், இன்று காலை காலமானார்.

UP CM's father
UP CM's father
author img

By

Published : Apr 20, 2020, 12:27 PM IST

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் (89) உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டு, வென்ட்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராஜசேகரன் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.