உத்தரப் பிரதேசம்: தலித் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அக்குற்றவாளிகள் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர் என யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தலித் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
-
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने हाथरस की घटना पर वार्ता की है और कहा है कि दोषियों के विरुद्ध कठोरतम कार्रवाई की जाए।
— Yogi Adityanath (@myogiadityanath) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने हाथरस की घटना पर वार्ता की है और कहा है कि दोषियों के विरुद्ध कठोरतम कार्रवाई की जाए।
— Yogi Adityanath (@myogiadityanath) September 30, 2020आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने हाथरस की घटना पर वार्ता की है और कहा है कि दोषियों के विरुद्ध कठोरतम कार्रवाई की जाए।
— Yogi Adityanath (@myogiadityanath) September 30, 2020
செப்டம்பர் 14ஆம் தேதி இளம்பெண் ஒருவர் ஆதிக்க சமூகத்தினர் நால்வரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைக்கப்பட்டும், நாக்கு வெட்டப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், காட்டுப் பகுதியில் இருந்து அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை மாற்றியும் சிகிச்சைப் பலனளிக்காமல் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூட்டுப் பாலியல் வன்புணர்வு: உறவினர்கள் அனுமதியின்றி பெண்ணின் உடலை எரித்த போலீஸார்
இதற்கிடையில் பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று உறவினர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, குற்றவாளிகளான சந்தீப், ராமு, லாவ்குஷ், ரவி ஆகிய நால்வர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர். இச்சூழலில் பெண்ணின் உடல் நேற்றிரவு (செப். 29) உறவினர்கள் அனுமதியின்றி காவல் துறைனரின் கட்டுப்பாட்டில் எரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.