ETV Bharat / bharat

’கரோனா பணிதான் முக்கியம்; தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை’

author img

By

Published : Apr 20, 2020, 4:33 PM IST

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

up-chief
up-chief

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் (89) சிறுநீரக பிரச்னை காரணமாக உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவந்த நிலையில், இன்று காலை 10.44 மணிக்கு காலமானார்.

இந்நிலையில் ஆனந்த் சிங் பிஷ்ட் காலமான செய்தி யோகி ஆதித்யநாத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு உயர் அலுவலர்களுடன் யோகி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் தந்தை மறைந்த செய்தி அறிந்த பின்னரும் கூட்டத்தை அவர் தொடர்ந்து நடத்தியுள்ளார்.

இதனிடையே நாளை நடைபெற உள்ள தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மாட்டேன் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”என்னுடைய தந்தையை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

ஆனால், உ.பி.யில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்துகிறேன். அதனால் நாளை நடைபெறும் எனது தந்தையின் இறுதிச் சடங்கில் நான் பங்கேற்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலமைச்சரின் தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.