ETV Bharat / bharat

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: சீனா குடைச்சல்... இந்தியாவுக்கு தோள்கொடுத்த ஃபிரான்ஸ்!

author img

By

Published : Jan 16, 2020, 11:53 AM IST

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப்பின் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதன் தாக்கம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஸ்மிதா சர்மா வெளியிட்ட கருத்தாக்கத்தின் தமிழ் வடிவம்...

UNSC
UNSC

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீரின் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்குப் பிறகு இரண்டாவது முறை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஐ.நா.வின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பத்து நிரந்தரமில்லா உறுப்பினர்களும் அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் பேசினர்.

இதில் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீரின் கள நிலவரம் குறித்தும், 370 நீக்கத்துக்குப்பின் மறுகட்டுமான பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.

காஷ்மீரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது, தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து முக்கியக் கேள்விகளை சீனா முன்வைத்தது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாத பேச்சுவார்த்தையைப் போல், இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்தத் தீர்மானமோ முக்கிய முடிவுகளோ எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அரணாக ஃபிரான்ஸ்

ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான ஃபிரான்ஸ், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்தது. இது குறித்து ஃபிரான்ஸ், காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் தனியே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விவகாரம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சீனா இந்தியாவுக்குத் தரும் இடைஞ்சல்களுக்கு அரணாக ஃபிரான்ஸ் பாதுகாத்துவருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தமில்லா உறுப்பினரான எஸ்டோனியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மஸ் ரெயின் சாலு, 'காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தானின் பிரச்னை; இது இருநாட்டு விவகாரம்' என ஃபிரான்சின் நிலைப்பாட்டையே தங்களின் நிலைப்பாடாகத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயணம்

கடந்த வெள்ளிக்கிழமை ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நடத்திய உரையாடலில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. கடந்த வாரம் அமெரிக்கா, நார்வே, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் காஷ்மீரில் பயணம் மேற்கொண்டது வெளியுறவுத் துறை விவகாரத்தில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 'காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் கூர்மையாக கவனித்துவருகிறோம்' என ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்துவருகிறது. இந்தப் பிரதிநிதிக் குழுவின் முக்கிய உறுப்பினராக ஃபிரான்ஸ் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிரதிநிதிக்குழு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோரை சந்திக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இந்தத் தகவல்கள் அடிப்படை இல்லாதவை எனத் தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அவர்கள் பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிப்ரவரியில் டிரம்ப் இந்தியா வருகை: கையெழுத்தாகுமா வர்த்தக ஒப்பந்தம்?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.