5.3.2020: மாநிலங்களவையில் சபாநாயகரின் மேஜை மீதிருந்த பேப்பரை கிழித்தெறிந்து, அவையின் விதியை மீறி நடந்துகொண்ட 7 காங்கிரஸ் எம்பிக்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து கலந்துகொள்ள முடியாமல் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
3.1.2019: அதிமுக, டிடிபி கட்சியினர், காவிரி ஆற்றில் அணை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர்கள் பேப்பர்களை தூக்கி எறிந்தனர். இதனால் 12 டிடிபி எம்பிக்கள், 7 அதிமுக உறுப்பினர்கள் மக்களவையின் அடுத்த 4 கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் தடை விதித்தார்.
2.1.2019: காவிரி பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்த 24 அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹஜன் 5 அவைக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தார்.
24.7.2017: தலித், இஸ்லாமியர்கள் மீது பசுக்காவலர்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பேப்பரை கிழித்து வீசிய காங்கிரசின் 6 மக்களவை உறுப்பினர்களுக்கு 5 அவைக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
3.8.2015: வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌக்கான் ஆகியோரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 காங்கிரஸ் எம்பிக்களை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
13.2.2014: தெலங்கானா பிரிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 18 எம்பிக்களை சபாநாயகர் மீரா குமார் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
2.9.2013: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 எம்பிக்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்பிக்கள் தெலங்கானா பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
15.3.1989: ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த சமயம் அது, இந்திரா காந்தி கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தக்கார் ஆணைய அறிக்கையின் மேல் எழுந்த விவாதத்தின் காரணமாக ஒரு வார காலத்துக்கு 63 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.