உத்தரப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அம்மாநில முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் அச்சிறுமி, அவர் உறவினர்கள் சென்ற கார் லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. அதை திட்டமிட்டு செய்தது குல்தீப் சிங் என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையாக எழுந்தது, அதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மேலும் சில குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதனால் அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 15 நாட்கள் தேவை என்று சிபிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து சிபிஐக்கு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.