ETV Bharat / bharat

கரோனா: மாணவர்களின் மனநிலையை கண்காணிக்க உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாணவர்களின் மனநிலையை கண்காணிக்க பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

university grants commission letter to universities, colleges due to corona outbreak

author img

By

Published : Apr 7, 2020, 1:03 PM IST

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ராஜ்நிஜ் ஜெயின் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

  • ஊரடங்கு காலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் பாதுகாப்புடன் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
  • மனநல ஆலோசகர்கள் அல்லது கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
  • கரோனோ ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
  • விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கண்காணிக்க பேராசியர்கள் அடங்கிய குழுவினை ஏற்படுத்திட வேண்டும்.
  • பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர்களுடன் தொலைபேசி, இமெயில், டிஜிட்டல், சமூகவலைதளங்களின் மூலம் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஆலோசனை வழங்க வேண்டும்.
  • கரோனாவிற்கு எதிராக மக்கள் தங்களை பாதுகாத்திட அரசு தெரிவித்துள்ள அனைத்து தகவல்களையும் மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்களின் மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா எண்ணாண 0804611007-ஐ தொடர்புகொள்ளலாம். அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் இது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானிய குழுவின் இணையதளத்தில் பதிவேற்றவும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.