பல்வேறு காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை பல சர்வதேச அமைப்புகள் விமர்சித்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐநா கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன்பு, போதிய கழிவறை இல்லாத காரணத்தாலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டதாலும் இந்தியாவை ஐநா விமர்சித்தது.
2010ஆம் ஆண்டு கழிவறைகள் குறித்த விவகாரத்தில், இந்தியா போன்ற வசதிமிக்க நாட்டில் 50 விழுக்காடு மக்களிடம் செல்ஃபோன் உள்ளது. ஆனால், 50 விழுக்காடு மக்களிடம் கழிவறை வசதி இல்லாதது கேலிக்குரியதாக உள்ளது என ஐநா அறிக்கை வெளியிட்டது.
2012ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் குறித்த விவகாரத்தில், ஜனநாயகத்தில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. நெருக்கடி நிலையின்போதுகூட சில உரிமைகளை காக்க இடமுண்டு. ஆனால், இந்த சட்டத்தில் அதற்கும் வாய்ப்பில்லை. இந்தச் சட்டத்திற்கு தடை விதித்தால் சர்வதேச தரத்திற்கு இணையாக நம் சட்டம் மாறும். அதுமட்டுமில்லாமல், குடிமக்கள் அனைவரின் நலனை காக்கும் விதமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது இந்திய தரப்பிலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பும் சமிக்ஞை இருக்கும் என ஐநா அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதேபோல், காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்களை ஐநா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களை வைத்து குதிரை பேரம் நடத்த மாட்டோம் - மகாராஷ்டிரா அமைச்சர்