டெல்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நோய் அறிகுறிகள் பெரிதாக இல்லாததால், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.