ETV Bharat / bharat

கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா வெளியே வரும் - பியூஷ் கோயல் நம்பிக்கை - Union Minister Piyush Goyal

டெல்லி: கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா விரைவில் வெளிவரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கரோனா பியூஷ் கோயல் Piyush Goyal Union Minister Piyush Goyal Corona Piyush Goyal
Piyush Goyal
author img

By

Published : Mar 29, 2020, 11:24 AM IST

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பல ஆயிரம் பேர் உயிரிழந்து, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு உற்பத்தி, தொழில், வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், "ஊழியர்கள் நம் சொத்துகள் மட்டுமல்ல, அவர்களை வீட்டைவிட்டு வெளியே வர அனுமதித்தால் அதுவே கோவிட்-19 எளிதாகப் பரவுவதற்கு சாத்தியக்கூறாக அமையும். இந்த நேரத்தில்தான் நீங்கள் ஊழியர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என வர்த்தகச் சங்கங்களை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஆதரிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே உள்ள கரோனா தொற்று குறித்த அச்சத்தை வெளிக்கொண்டு வந்து நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கருத்துப்படி, இதுவரை இந்தியாவில் 918 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தக் கோவிட் -19 நெருக்கடியிலிருந்து இந்தியா விரைவில் வெளிவந்து வலுவான நிலையில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தெலங்கானா முதலமைச்சரை கடுமையாக சாடிய மத்திய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.