ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சிறுபான்மையினருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை பாஜக அரசாங்கம் நிறைவேற்றி உள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கக் கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில மத, சாதி அமைப்புகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த அகதிகள் 7 பேருக்கு இந்திய குடியுரிமை இன்று வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் மனுசிக் மந்தவியா இந்த குடியுரிமையை அவர்களுக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை திருத்த சட்டத்தால் நம்பிக்கை பிறந்துள்ளது. அகதிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை இது” என பாராட்டி இருந்தார். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : வன்முறையைத் தூண்டும் உதயநிதி ஸ்டாலின்...!'