புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் வியாபாரம் மேம்படுத்துவதற்காக வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருந்த இந்த வணிகத் திருவிழா, (8/1/2020) இந்தாண்டிற்கான திருவிழா தொடங்கியது. இதற்காக புதுச்சேரி நேரு வீதியில் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொரு கடையிலும் பொருட்கள் வாங்குவதற்கு கூப்பன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு குளிர்சாதன பெட்டி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்படும்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நாராயணசாமி பேசுகையில், "மத்திய அரசு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சரக்கு மற்றும் சேவை வரியை இந்தியா முழுவதும் கொண்டு வந்தது. ஆனால் நாங்கள் காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரே நாடு ஒரே வரி நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். இருப்பினும் மத்தியில் பாஜக ஆட்சி வந்ததால் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த முனைப்போடு செயல்பட்டனர். இதனால் புதுச்சேரியில் இவ்வகை வரியினால் மாநில பெரிதும் பாதிக்கப்பட்டது.
எலக்ட்ரானிக் பொருள்கள், ஓட்டல் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசிடம் பேசி மாநிலத்தில் வரிகளை நாங்கள் குறைத்துள்ளோம். வெளிமாநில மக்கள் வந்தால்தான் புதுச்சேரிக்கு வருமானம் அதிகரிக்கும் ஆனால் சமீப காலமாக புதுச்சேரி வாகன வியாபாரம் குறைந்துவிட்டது.
மத்திய அரசுக்கு மாதம் ஒரு லட்சம் கோடி வரி கிடைக்கிறது ஆனால் புதுச்சேரிக்கு இரண்டு மாதம் கொடுக்க வேண்டிய மத்திய அரசு இழப்பீடு மிக தாமதமாக கிடைக்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டால் நிதி இல்லை என்று சொல்கிறார்கள் புதுச்சேரிக்கு மட்டும் நிதி உள்ளதா?" என கேள்வி எழுப்பினார். இவ்விழாவில் பொதுமக்கள் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை - குமரியில் பரபரப்பு