ETV Bharat / bharat

சிவகங்கையில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி - மத்திய கல்வி அமைச்சர்

author img

By

Published : Oct 19, 2020, 7:43 PM IST

சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி அமையவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர்
மத்திய கல்வி அமைச்சர்

மத்திய அரசின் கீழ் இயங்கும் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் அமையவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (அக்.19) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடியில் அமையவுள்ளது.

இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். புதிதாக அமையவுள்ள இந்தப் பள்ளி சிறப்பான தரத்துடன் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இதன்மூலம் பயனடையவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

ரமேஷ் பொக்ரியால் ட்வீட்
ரமேஷ் பொக்ரியால் ட்வீட்

கேந்திரிய வித்யாலயா அமைப்பின் கீழ் அமையவுள்ள ஆயிரத்து 243ஆவது பள்ளி இதுவாகும் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சுயமரியாதை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் - ஆளுநரிடம் சரத் பவார் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.