ETV Bharat / bharat

ஜாமியா மிலியா பல்கலைக்கழக பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - ஜாமியா மிலியா பல்கலைக்கழக பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

டெல்லி:  ஜாமியா மிலியா பல்கலைக்கழத்தில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Jamia university
Jamia university
author img

By

Published : Feb 3, 2020, 1:41 PM IST

மத்திய அரசு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தியாவின் சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளா, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் பஞ்சாப், ராஜஸ்தான் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின.

அதேபோல டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்த்திற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம்தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கூட்டத்தை நோக்கிச் சுட்டார். இந்தத் திடீர் தாக்குதலில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் துப்பாக்கியுடன் வந்த அந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர். விசாரணையில் அவர், 17 வயதே ஆன சிறுவன் எனத் தெரியவந்தது. தற்போது விசாரணைக்காக் அவர் 14 நாள்கள் காவலில் உள்ளார்.

அதன்பின் இரண்டு நாள்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. இதை எதிர்க்கும்விதத்தில் இளைஞர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தினார். இவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் தெரியாத இருவர் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் சிவப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், அதில் ஒருவர் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும் அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. நேற்று இரவு சரியாக 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது, இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதைப் பார்த்தோம். பிறகு வாகன எண்ணைக் குறிப்பெடுத்துக்கொண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தோம்" என்றார்.

இது தொடார்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாணவர்கள் வெவ்வேறு தகவல்களை அளிப்பதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்ட பிரிவுகளின்கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'கோட்சேவும் மோடியும் ஒன்னு' - ராகுல் காந்தி

Intro:Body:

Blank

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.