காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதுகுறித்து விவாதிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. இதில், கடிதம் எழுதியவர்களை கட்சியின் மற்ற பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஏழு மணி நேரம் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டினார். இதனால், குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகிய மூத்தத் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, மூத்தத் தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சித் தலைமை இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அதற்கு நேரெதிராக கடிதம் எழுதியவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் சார்பில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள கபில் சிபல், "ஜிதின் பிரசாத்திற்கு எதிராக உத்தரப் பிரதேச காங்கிரஸ் பேசியுள்ளது துரதிருஷ்டவசமானது.
-
Unfortunate that Jitin Prasada is being officially targeted in UP
— Kapil Sibal (@KapilSibal) August 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congress needs to target the BJP with surgical strikes instead wasting its energy by targeting its own
">Unfortunate that Jitin Prasada is being officially targeted in UP
— Kapil Sibal (@KapilSibal) August 27, 2020
Congress needs to target the BJP with surgical strikes instead wasting its energy by targeting its ownUnfortunate that Jitin Prasada is being officially targeted in UP
— Kapil Sibal (@KapilSibal) August 27, 2020
Congress needs to target the BJP with surgical strikes instead wasting its energy by targeting its own
சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பாஜகவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பதில் சொந்த கட்சியினரை தாக்கி காங்கிரஸ் நேரத்தை விரயம் செய்கிறது" என சாடி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரு கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் - காவல்துறை