மகாராஷ்டிரா மாநிலம் கன்கவ்லியில் புதிய மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர், "மக்கள் தொகை அதிகமாகவும் பலவீனமான சுகாதார கட்டமைப்பையும் கொண்டுள்ள இந்தியா பெருந்தொற்றை எப்படி கையாண்டது என பலர் வியக்கின்றனர். சரியான நேரத்தில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்றார்.
மகராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த அமித் ஷா, "மூன்று சக்கரங்களை கொண்டுள்ள ஆட்டோ ரிக்ஷா அரசு அனைத்து மட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது" என்றார்.
2019ஆம் ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவி குறித்த விவகாரத்தில் மாற்று கருத்து கொண்ட சிவசேனா, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.