ETV Bharat / bharat

இம்ரான் கான் ஒப்புக்கொண்ட உண்மையையே ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது - வெளியுறவுத் துறை

author img

By

Published : Jun 6, 2020, 5:47 PM IST

டெல்லி : பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட உண்மையையே ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை குறிப்பிடுவதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

imran khan
imran khan

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் 'Analytical Support and Sanctions Monitoring Team' என்ற குழு அறிக்கை ஒன்றை சமீபத்தில் சமர்ப்பித்தது. அதில், "பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றன.

இது ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை அபாயத்தில் தள்ளியுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்.2) செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை இந்த அறிக்கை நிரூபணமாக்கியுள்ளது.

பயங்கரவாத குழுக்கள் என அறிவிக்கப்பட்ட பல அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் தந்துவருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐநா அறிக்கையை இந்தியா தவறாகப் புரிந்துகொண்டதே இந்த அந்நாட்டு வெளியுறவுத் துறையினர் கருத்து வெளிப்படுத்துவதாகப் பாகிஸ்தான் அரசு விமர்சித்திருந்தது. இதற்கு தற்போது பதிலளித்துள்ள நம் வெளியுறவுத் துறை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதையே ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலமாகப் பாகிஸ்தான் விளங்குவதாகக் குற்றம்சாட்டிய இந்தியா, பயங்கரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்த சீனா: விமானங்களை அனுமதித்த அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.