ETV Bharat / bharat

பிரிட்டன் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் ஜூன் 11 முதல் 14ஆம் தேதிவரை ஜி7 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தூதரக அலுவலர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

UK invites PM Modi, UK invites PM Modi to attend G7 summit, PM Modi for G7 summit as guest, latest news on G7 summit, ஜி7 உச்சி மாநாடு, ஜி7 உச்சிமாநாடு, ஜி7 பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு, பிரிட்டன் கார்ன்வால், ஜி7 உச்சி மாநாடு தேதி, g7 summit date
UK invites PM Modi to attend G7 summit
author img

By

Published : Jan 17, 2021, 5:28 PM IST

டெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் கரோனா தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

கர்நாடகத்தில் அமலுக்கு வரும் பசுவதை தடுப்பு சட்டம்!

ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வரவுள்ளதாகக் கூறியுள்ளார். ‘உலகின் மருந்தகம்’ என்ற வகையில், இந்தியா ஏற்கனவே உலகின் 50% விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தொற்றுநோய் காலத்தில் பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டதாகவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா நோய் கிருமி கண்டறியப்பட்டு, தொற்று அதிகரிப்பதால், அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.