கர்நாடக மாநிலம் உடுபியில் உள்ள பெஜாவர் மடத்தின் தலைமை மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த ஸ்வாமிகள் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 88 வயதான இவர், சிகிச்சைக்காக கடந்த 20ஆம் தேதி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிமோனியா நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட அவர், சுவாச சிக்கலால் தவித்துவந்தார். அவர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அவரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் மடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை பேஜாவர மடத்தில் விஸ்வேஷ தீர்த்த ஸ்வாமியின் உயிர் பிரிந்தது. மறைந்த மடாதிபதிக்கு முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு மாலை இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கௌடா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்!