ETV Bharat / bharat

குடியுரிமை விவகாரம்: மகாராஷ்டிர கூட்டணி அரசில் கருத்து மோதல் - சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில், மகாராஷ்டிர கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.

Maharastra
Maharastra
author img

By

Published : Feb 22, 2020, 2:58 PM IST

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைமையிலான கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தேர்தலுக்கு முன் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா, தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.

இதையடுத்து, இரு துருவங்கள் இணைந்து தற்போது கூட்டணி ஆட்சி நடத்திவரும் நிலையில், இக்கூட்டணியில் தற்போது சலசலப்பு உருவாகியுள்ளது. நேற்று டெல்லி சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ், 'குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய விவகாரங்களால் இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு ஆபத்து இல்லை' என பிரதமர் கூறியதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மேற்கண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இதுபோன்ற கருத்தை கூட்டணிக்கட்சி தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மனிஷ் திவாரி, உத்தவ் தாக்ரேவுக்குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

'மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு சிஏஏ தொடர்பாக சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். என்.பி.ஆர் மேற்கொள்ளப்பட்டால் என்.ஆர்.சியைத் தவிர்க்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பின்படி மதரீயாக குடியுரிமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது' எனத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவுக்கு பதிலளிக்கும் விதத்தில் மனிஷ் திவாரி கூறியுள்ள கருத்து, கூட்டணிக்குள் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. நேற்று டெல்லியில் மோடியைச் சந்தித்தபின், கூட்டணிக்கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த உத்தவ் தாக்ரே, 'இந்த கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை, கூட்டணி ஐந்தாண்டுவரை தொடரும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: நீதித் துறைக்கு சமூக வலைதளத்தால் ஆபத்து: சட்ட அமைச்சர் கவலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.