ETV Bharat / bharat

உணவகத்தில் வாங்கிய உணவு - இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

ஹைதராபாத்: உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட உணவால் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-food-poisoning
-food-poisoning
author img

By

Published : Feb 12, 2020, 5:36 PM IST

ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்ப செயல்முறை தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான ரவி நாராயணா பிப்ரவரி 10ஆம் தேதி தனது மனைவி, இரண்டு மகன்களுடன் ஹைதராபாத் வந்துள்ளனர்.

அப்போது, ரவி நாராயணா அருகில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கியுள்ளார். பின்னர் அவற்றை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரவி நாராயணவிற்கு வாந்தி, குமட்டல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது இரண்டு வயது மகனுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை அலுவலர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரி சீனிவாச ராவ், இது இவர்கள் உணவகத்தில் சாப்பிட்ட உணவு காரணமா, இல்லை வேறு இடங்களில் சாப்பிட்ட உணவால் இது நிகழ்ந்தாத என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த உணவகத்தில் உணவு மாதிரிகளை சோகரித்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.