ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். தேடுதல் வேட்டையை மேற்கொண்டு என்கவுன்டர் சம்பவங்களை நிகழ்த்திவருகின்றனர்.
இந்நிலையில், சோபியான் மாவட்டம் சாகுரா பகுதியில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் தலைமறைவாக இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதற்கிடையே, அவர்களை நோக்கி ஒளிந்து கொண்டிருந்த பிரிவினைவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அதில், இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பிரிவினைவாதிகள், எந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.