ETV Bharat / bharat

உள்கட்சிப் பூசல்: திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை! - திருணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி உட்கட்சி பூசல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் இரு வேறு சம்பவங்களில் நேற்று (ஜூன் 10) கொல்லப்பட்டனர். உள்கட்சிப் பூசல் காரணமாகவே இது நடந்ததாகக் கூறப்படுகிறது.

TMC FIGHT YOUTH LEADER KILLED
TMC FIGHT YOUTH LEADER KILLED
author img

By

Published : Jun 11, 2020, 11:23 AM IST

மேற்கு வங்க மாநிலம், சவுத் 24 பிராக்னாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவ திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி அமீர் அலி கான். 56 வயதான இவர், பசாந்தி என்ற பகுதியில் நேற்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். அதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, புர்துவான் மாவட்டம் லகிபூர் என்ற பகுதியில் இருவேறு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் கவுதம் தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அக்கட்சியின் இளைஞர் அணியினர் இடையே நிலவிவரும் உள்கட்சிப் பூசலின் விளைவே இந்தக் கொலைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அக்கொலைகளுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க : கரோனாவால் மோசமடைந்துவரும் உலகம்: வருந்தும் உலக சுகாதார அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.