தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அமைத்துள்ள சாகுன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் இருப்பிடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், அவர்களை சரணடையுமாறு வலியுறுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு எதிர்வினையாற்றினர். இதனையடுத்து, இருதரப்புகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக எல்லை பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி வழக்கு: அனில் கண்டேல்வாலை கைது செய்த அமலாக்கத் துறை!