ETV Bharat / bharat

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - Two militants, an associate killed in encounter with security forces in J-K

ஜம்மு காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

author img

By

Published : Apr 25, 2020, 3:53 PM IST

காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. பாதுகாப்புப் படையினரை கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு சுட்டனர். இருதரப்பினரிடையே நீண்ட நேரம் ஏற்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இருதியில் இரண்டு தீவிரவாதிகளும், அவர்களின் உதவியாளரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், இவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.