ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் மாவட்டம், தால் கிரமத்தில் உள்ளது பத்பாஹல் வனச் சரகம். இங்கு நேற்று ராய்ராகோல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் தேன் சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு தேன் உண்ண வந்த கரடி ஒன்று, மனிதர்களும் தேன் சேகரிக்க வந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
உயிருக்கு பயந்து ஓடியவர்களை கரடி துரத்திப் பிடித்து தாக்கியதில், இரண்டு பேர் மரத்தின் மீதேறி உயிர் தப்பினர். மீதமிருந்த மூன்று பேரில் தாக்குதலுக்கு ஆளாகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் காயமடைந்த நபரை சுரேந்திர சாய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவர்களின் சடலம், உடற்கூறாய்விற்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆற்றில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில்!