டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து விமானம் ஒன்று நேற்று (ஜனவரி 2) வந்து இறங்கியது. இதில் வந்த 2 பேரிடம் சுங்கத் துறை அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5.35 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதைப் பொருள் பையில் மறைத்துவைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 22 கோடியாகும்.
இதனைப் பறிமுதல் செய்த சுங்க இலாகா அலுவலர்கள், அவர்கள் 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் சாம்பியன் நாட்டைச் சேர்ந்த முல்பாய் ஜோசுவா மற்றும் மெம்பே வில்லியம் எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.