கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய இளைஞர் ஒருவரைப் பிடித்து அடித்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த இளைஞரின் தந்தை கடும் கோபம் அடைந்துள்ளனர். காவலரால் அடிவாங்கிய இளைஞரின் தந்தையும் காவலர் என்பதால் மகனை அடித்த காவலரிடம் நேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சாலையில் தகாத வார்த்தைகளில் பேசி இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் சண்டைக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் ரயில் தடம்புரண்டு விபத்து- 20 பேர் படுகாயம்