சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் பொது ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறும்போது, ''கடந்த வாரம் சுக்மா மாவட்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நான்கு நக்சல்களை கைதுசெய்து அவர்களிடமிருந்த ஏகே-47, எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த ஆயுதங்களை நக்சல்களுக்கு வழங்கியதில் சுக்மா மாவட்டத்தின் இரு காவலர்கள் உதவியாக இருந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் துணை காவல் ஆய்வாளர் ஆனந்த் ஜாதவ், தலைமை காவலர் சுபாஷ் சிங் ஆகியோர் கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் திவாரி தலைமையிலான 9 பேர் கொண்ட சிறப்பு குழு விசாரித்து வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக: பரபரப்பாகும் அரசியல் களம்