மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரை சேர்ந்தவர்கள் ரோஷன் தாகூர் (35) அவரது இளைய சகோதரர் பூரா தாகூர் (32). நேற்று முன்தினம் நள்ளிரவில் துர்கா நகர் பகுதியில் இவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கையில் கோடரி மற்றும் இதர ஆயுதங்களுடன் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ரோஷன் தாகூர், பூரா தாகூர் ஆகியோர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக ரோஷன் தாகூர், பூரா தாகூர் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.