ஓஆர்எப் அமைப்பைச் சேர்ந்த கஞ்சன் குப்தா வாயிலாக இந்தத் தகவல் வெளியே தெரியவந்தது. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை டேக் செய்து, ட்விட்டர் இந்தியாவின் புவியியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது. ஜம்மு காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டுகிறது, இது இந்திய சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் பலரும் ட்விட்டர் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும்படி ரவி சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பலரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லேஹ் என்பது சீனாவின் பகுதி என கருதிறதா ட்விட்டர் இந்தியா என ஒரு நெட்டிசன் டேக் செய்து கேட்டிருக்கிறார்.